மும்பை: யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூரும் அவரது குடும்பத்தினரும் 20 க்கும் மேற்பட்ட ஷெல் (போலியான0 நிறுவனங்களை அமைத்து சொத்துக்களை சட்டவிரோதமாக முதலீடு செய்வதற்கு பயன்படுத்தியதாக, அமலாக்க இயக்குநரகம் (ED) கண்டறிந்துள்ளது. இந்நிலையில் ரானாவை வரும் 11ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரக்க மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
யெஸ் வங்கி தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. கடனை திருப்பி செலுத்த திறன் இல்லாதவர்கள் மற்ற வங்கிகள் கடன்தர முன்வராத பல நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி கடன் வழங்கியிருக்கிறது. இதன் காரணமாக வாரா கடன் அதிகரித்துள்ளது.
எஸ்ஸார் ஷிப்பிங், மெக்லாய்ட் ரஸ்ஸல். ஐஎல் அண்ட் எஃப்எஸ், ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், சிஜி பவர், டிஹெச்எஃப்எல், உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் யெஸ் வங்கி ரூ.10,206 கோடிக்குமேல் கடன் கொடுத்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் கடனை இன்னமும் திருப்பி செலுத்தவில்லை. இதனால் யெஸ் வங்கியின் வாராக்கடன் கடுமையாக அதிகரித்துள்ளது.