கோர்டோபா : கொரோனாவால், ஸ்பெயின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் மலையில் அமைந்துள்ள நகரம் ஒன்று எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்தது. அந்நகரில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படாதது தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்பெயின், கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, 1,31,646 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12, 641 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் மலைமேல் அமைந்துள்ள ஜகாரா டி லா சியரா என்ற நகரம், நாட்டில் கொரோனா குறித்த தகவல்களை அறிந்த உடனே, தனது எல்லைகளை மூடியது. இதனால், நாட்டின் மற்ற பகுதிகளுடன் தொடர்புகளை துண்டிக்கப்பட்டது. இதனால், ஸ்பெயினில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த போதும், இந்நகரில், யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இந்நகருக்கு அருகில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் கொரோனா பாதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவிலிருந்து தப்பித்த ஸ்பெயின் நகரம்